தமிழ் சமுதாயத்தில் மணமுறிவும் உளநலமும்

– ரெ.பாரதி – Working paper – 19

தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே குடும்பம் எனும் சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வருகின்றது. இவ் அமைப்பு முறையானது தற்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டு சிதைவுறும் நிலை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து செல்லும் பாங்கினை காணமுடிகின்றது கடந்த தசாப்த காலங்களில் மணமுறிவு என்பது மிக அரிதான ஒன்றாகவே இருந்து வந்த நிலையிலும் அதுவும் மிக வெட்கப்படக் கூடியதான ஒரு அருவருக்க கூடியதான செயல் என்ற நிலையில் இருந்து தற்காலத்தில் இதுவும் மிக சாதாரணமான சமூக நிலை எனும் நிலையினை அடைய முடிவதனை காணமுடிகின்றது.

இவ்வாறான மணமுறிவின் காரணமாக குடும்ப கட்டமைப்பு உடைந்து விடுவதால் குடும்பத்தின் பகுதியாக்கப்பட்ட கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள் என அனைவரும் உளரீதியான நெருக்கீட்டுக்கு ஆளாகும் நிலையினை காணமுடிகின்றது இவ்வாறான நிலமையின் அதிகரிப்பிற்கான காரணங்களை உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கில் ஆய்வதே இப்பந்தியின் நோக்கமாக அமைகின்றது.

இவ் குடும்பம் எனும் அமைப்பு தமிழ் சமுகத்தை பொருத்தளவில் மிகவும் நெருக்கமான பிணைப்பினை கொண்டமைந்துள்ளது திருமணம் எனும் சடங்கு சட்டப்படியோ சமய சம்பிரதாயபடியோ நிறைவடைந்தாலும் அது குடும்ப வாழ்வின் நிலைப்பினை மையப்படுத்தியதான செயற்பாடாகவே நிறைவேற்றப்படுவதை காணமுடிகின்றது. திருமண பந்தத்தில் இணைக்கப்படும் கணவனும் மனைவியும் தமது இன்பத்திலும் துன்பத்திலு உயர்விழும் தாழ்விலும் ஒருவரை ஒருவரை ஒருவர் தாங்கி கொள்வதற்கும் விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதற்குமாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத் திருமண வாழ்வின் முறிவிற்கு காரணங்களான சமுகவியல், உளவியல் காரணிகள் என கீழ்வரும் விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன இவை ஆண்,பெண் என இருபாலரிலும் சம அளவில் செல்வாக்கு செலுத்துவதை காணமுடிகின்றது தற்கால நவநாகரீக போக்கு எப்பொழுதும் இன்பத்திற்கான சந்தர்ப்பங்களை மட்டுமே நாடுவதாகவும் மகிழ்ச்சியை மாத்திரம் வாழ்வில் கொண்டாட எத்தனித்திருக்கும் மனங்கள் ஏற்பட்டு விடுகின்ற துன்பமான அல்லது தவறுதலாகவோ அல்லது தமது முயற்சியின் விளைவாகவோ நிகழ்ந்து விடும் துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது அதனை வெற்றி கொள்வதற்கான மனோ திடத்தை வழங்காமல் உடனடி தீர்வாக இம் முடிவினை எடுத்து விடுவதற்கு தூண்டு கருவியாக அமைந்து விடுகின்றது இதற்கான தூண்டுதல்கள் வாசிப்பினூடாகவும் தொலைக்காட்சி நாடகங்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிட்ம் இருந்தும் பெற்றுக் கொள்ளும் மேலெழுந்த வாரியான தூண்டுதலின் விளைவாக ஏற்படுவதனை நோக்க முடிகின்றது.

காதல் திருமணங்கள் மூலமாக தமது குடும்ப வாழ்வை ஆரம்பித்துக் கொள்வோர் காதல் நிலைப்பு காலங்களில் தனது துணைவருக்கு முற்று முழுதாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டவராக தனது விருப்பு வெறுப்புக்களையும் சுகதுக்கங்களையும் விட்டுக் கொடுக்கும் ஒரு நல்ல மனிதனாக அல்லது தன்னை ஒரு மகானாக காட்டிக் கொள்ளும் ஒருவர் திருமணத்தின் பின்னரான வாழ்க்கை காலங்களில் தாம் கண்ட மனிதனின் நடத்தையை காணாது தோல்வியுறுகினறனர். இந்த விடயம் காலப்போக்கில் சிறு சிறு குற்றம் குறைகளாகி பெரிதாக வளர்ந்து விடுகின்ற பொழுது தமது உடனடி தேர்வாக மணமுறிவினை நாடி விடுகின்றனர்.

ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படும் தற்காலத்தில் ஆணுக்கு பெண் எல்லா விதத்தில் இயலுமை ஆற்றல் உடையவர் எனும் நிலை மேலோங்குகின்ற பொழுது தனது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகின்ற பொழுது ஆணினுடைய பங்களிப்பு சமபங்காக எதிர்பார்க்கின்ற பொழுது அது கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகின்ற பொழுது குடும்ப வாழ்வு நிலை தருமாறி மணமுறிவிற்கு வித்திட்டு விடுகின்றது.

திருமணம் பற்றிய சரியான ஆழமான புரிதல் இல்லாமல் அது ஒரு சட்டப்படியான அல்லது சம்பிரதாய ரீதியிலான ஒரு சடங்கு மாத்திரமே எனும் இளையவர்களின் அபிப்பிராயம் திருமண பந்தம் என்பதற்கான காத்திரமான மதிப்பையோ அல்லது புரிதலையோ தெளிவுபட தவறி விடுகின்றனர் இது அவர்களது பார்வையில் இணைந்து வாழ்வதற்கான சட்ட அங்கிகாரம் மாத்திரமே எனும் நோக்கு எந்த விடயத்தையும் அனுசரித்து போகின்ற ஆற்றலை இல்லாதொழித்து சட்டத்தை நாடும் நிலைக்கு இட்டுச் சென்று விடுகின்றமை அதிகரித்து செல்லும் மணமுறிவிற்கு காரணமாகி விடுகின்றது.

துரிதமாற்றத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நவீன உலகத்தில் எதிர்பார்ப்புகளுடன் கூடிய மனிதமனநிலை மாற்றம் கண்டு விடுகின்றது ஒரு காலப்பகுதியில் ஆடம்பர விடயங்களாக நோக்கப்பட்ட விடயங்கள் அத்தியவசியமான விடயங்களாக மாற்றம் கண்டுள்ளது எடுத்துக் காட்டாக தொலைபேசி மோட்டார்சைக்கிள் போன்ற விடயங்களை நோக்க முடிகின்றது இதன் அடியாக எழும் தேவை நிவர்த்தியை தனது வாழ்க்கை துணையின் மூலம் எட்டிவிடுவதற்கு முனைகின்ற போது அவரது வருமானம் ஈட்டலும் எதிர்பார்ப்பும் மலையும் மடுவும் போன்றதான இடைவெளியை உண்டு பண்ணி விடுகின்றது. இது காலப்போக்கில் தனது வாழ்க்கை துணை மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விரிசல் பெரிதாகி மணமுறிவில் கொண்டு சென்று விடுகின்றது.

தற்காலத்தில் தொழில்நுட்ப வசதிகளின் அதிகரித்த வளர்ச்சி போக்கு அதனை அன்றாட வாழ்வில் தவிர்த்து வாழமுடியாத நிலையில் ஏதோ ஒரு விதத்தில் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனையால் ஏற்படுகின்ற புதிய நட்புகள் புதிய தொடர்புகள் என்பன சாதாரண தகவல் தொடர்பினை கடந்து தகாத உறவு நிலையாக மலர்ந்து விடுகின்ற பொழுது இந்த விடயம் தமது வாழ்க்கை துணைக்கு தெரிய வருகின்ற பொழுது மனஉடைவினை ஏற்படுத்தி ஏமாற்றம் விரக்தியுற்ற நிலைக்கு ஆலாக நேரிடுகின்றது இதன் மூலம் மன வாழ்வு சட்டத்தின் முன் தமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் மணமுறிவிற்கு வித்திட்டு விடுகின்றது,

குடும்ப உறுப்பினர்களிடையிலான சரியான பரஸ்பர தொடாபாடல், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தனது வாழ்க்கை துணையின் நிறைவில் திருப்தி காணுதல் போன்ற விடயங்களுக்கும் தனது வாழ்க்கை துணையின் எதிhபார்ப்புக்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதனால் புறக்காரணிகளின் இடையீடுகள், தமது தேவையை நிறைவு செய்ய முடியாத வாழ்க்கை துணையினை கவனத்தில் எடுக்காது தனது அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய ஒருவரது தொடர்பு நிரந்தரமாகி விடுகின்ற பொழுது அது நிரந்தர குடும்ப உறவினுள் விரிசல்களை ஏற்படுத்தி விடுகின்றது.

மேற்கண்ட காரணிகள் போன்று இ;னும் பல காரணிகள் போன்று செல்வாக்கு செலுத்தி குடும்ப உறவினை மணமுறிவு வரை சென்று விடுகின்றது இதன் மூலம் கூடதலாக பாதிக்கப்படுவது அக்குடும்பத்தின் சிறுவர்களேயாவர் தாம் வளர்ந்து வரும் சுழலில் அன்பு, பாசம், பாதுகாப்பு, அரவணைப்பு, வழிகாட்டுதலுக்காக எப்பொழுதும் தமது பெற்றோரது அன்பையும் பாராமரிப்பையும் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்கள் பெரும் மன உளைச்சல், மனநெருக்கீடு போன்றவற்றால் பாதிப்பிற்குள்ளாகி விரக்தியுற்ற வாழ்க்கை வட்டத்திலுள் அமுல்படுத்தப்பட்டு விடுகின்றனர் இது அவர்களது உடல் உள அறிவு விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும் அபாயம் தோற்றம் பெற்று விடுகின்றது.

சமுக அந்தஸ்து மரியாதை என்பவற்றை இல்லாதொழித்து குடும்ப தலைவன், தலைவியின் நடத்தை குடும்பத்தின் ஏனையவர்களது கௌரவத்தையும் கெடுத்து விடும் நிலை உருவாகி விடுகின்றது. இது அவர்கள் மனநிலையில் கூட மீள் தாக்கம் செலுத்தும் ஒரு விடயமாக மாறிவிடுகின்றது நின்மதி இன்மை, மனநிலை குழப்பம், சோர்வு, இயலாமை, விரக்தி எனும் நிலைகளை கடந்து செல்கின்ற பொழுது ஆரோக்கியம் குன்றிய தனிமனிதர்களாக மாறிவிடுகின்ற அபாயம் உண்டு.

இளைய தலைமுறையினர் தாம் விரும்பிய படி தமது திருமண வாழ்வினை அமைத்துக் கொண்டு விடுகின்றனர் இருந்தும் திருமணமாகி ஆரம்ப காலங்களில் இல்லற வாழ்வு இனிதாக அமைந்திருந்தாலும் சில வருடங்களின் பின்னர் பல்வேறு காரணிகள் குடும்ப வாழ்வில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி தொடங்கி விடுகின்றது குறிப்பாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவீனங்கள் தமது குடும்பத்திற்கான நிரந்தர வருமானத்தை ஈட்டிக் கொண்டு வாழ்க்கை செலவீனங்களை ஏதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மறுத்து விடுகின்றது .இந்நிலையில் தனது மனைவியை சீதனம் எனும் கேள்வியாலும் கோரிக்கையாலும் துளைத்தெடுக்கின்றன நிலை உருவாகி விடுகின்றது. இதனால் இனிமையாய் மலர்ந்திருந்த காதல கல்யாண வாழ்க்கையை கசப்படைய தொடங்கி விடுனகின்றது இவ்வாறான எதிர்பார்ப்பு பொய்த்து விடுகின்ற சந்தர்ப்பங்களில் வன்கொடுமைகள் என விரிவடைந்து சட்ட நடவடிக்கை என வளர்ந்து மணமுறிவினை ஏற்படுத்தி விடுகின்றது.

வேகமான பொருளாதாரம் ஈட்டும் செயற்பாடுகள் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலை மற்றும் தொழில் நிமிர்த்தமாக இருவரும் இருவேறு இடங்களில் தங்கியிருப்பதற்கு நிர்ப்பந்தமாக விடுகின்ற நிலை ஆரோக்கிய குடும்ப வாழ்விற்கு அவசியமான பரஸ்பர உணர்வு பகிர்வு, திறந்த மனதுடனான உரையாடல், ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்தல்,பாராட்டுதல், பிள்ளைகளுடனான நேரம் செலவழப்பதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்து செல்லும் நிலை அல்லது நேரமே கிடைக்காமை போன்ற சந்தாப்பங்கள் குடும்பத்தை ஈடேட்டத்தை குறைத்து அவர்களின் முக்கியத்துவம் அவசியமற்ற குடும்ப சூழ்நிலையை காலஒட்டத்தில் ஏற்படுத்துகின்ற நிலை வலுவடைந்து செல்லும்போது சிறு சிறு முரண்பாடுகளின் பின்னணியும் இணைந்து செயற்படுகின்ற போது தம்மால் தனித்து செயற்பட முடியும் அல்லது தனித்து தனது குடும்பத்தினை கொண்டுசெல்ல முடியும் எனும் மன நம்பிக்கையும் சுயமான வருமான ஈட்டலும் உத்வேகத்தை கொடுத்து விட அற்புதமான மணவாழ்வு கேள்விக்குறியாகி விடுகின்றது.

திருமணமமாகிய பின்னரும் பெற்றோரின் தலையீடு தமது பிள்ளைகள் மீதான பாச பிணைப்பு காரணமாக அவர்களது குடும்பத்திலும் தொடாவதனை பல குடும்பங்களில் அவதானிக்க முடிகின்றது திருமணமான பிள்ளைகளை nhதடர்ந்தும் தமது சிறு பிள்ளைகள் போன்ற எண்ணப்பட்டுடனே அனேக பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர் இந் நிலை அவர்களது குடும்ப தீர்மானங்களை கூட தாம் தலையிட்டு தமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அமைய வேண்டும் எனும் எண்ணப்பாடு புதிய குடும்பத்தில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவித்து விடுகின்றது தற்கால அவதானிப்பின் படி பெண் பிள்ளைகளுடன் பெற்றோரது இணைவு அதிகரித்து செல்வதினை அவதானிக்க முடிகின்றது இவ்வாறான செயற்பாடடு முறைமை சகிப்பு தன்மையின் அளவினை கடந்து விடும் நிலையில் அது மணமுறிவிற்கு வித்திடுகின்றது.

எனவே தான் அடிப்படையில் திருமண வாழ்வு என்றால் என்ன என்பதை விளங்கி கொண்டு செயற்படுவதும் அதன் பணியின் உச்ச விளைவை அனுபவித்து ஆரோக்கியமான மனவாழ்வினூடாக சிறப்பான குடும்ப கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் தனிநபருக்கு மாத்திரமின்றி அவரது குடும்பம், குடும்பம் அமைந்துள்ள சமுதாயம் அனைத்திற்கும் மிக பெரிய பொக்கிசத்தை ஏற்படுத்தி விடுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது

– ரெ.பாரதி
தே.ச.அ.நி, கிளிநொச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *