மது, போதை வஸ்து பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்

–  மா.சஜீவனா – Working paper – 20

எமது நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் சில தீய பழக்கங்கள் தொடர்ந்தும் நலிவடையாமல் வலிமை பெற்றுச் செல்கின்றது. மது, போதைவஸ்து மற்றும் சிகரெட் பாவனை இன்று ஆறு தொடக்கம் அறுபது வரை வேரூன்றி நிற்பது கவலைக்குரிய விடயமே! எமது நாட்டை பொறுத்தவரையில் தவறணைகளிலும் பேரங்காடிகளிலும் மதுவிற்காக ஏங்கி நிற்கும் நீண்ட வரிசைகளைப் பார்க்கும் போது எத்துணை இப் பழக்கவழக்கங்கள் எமது கலாச்சாரத்துடன் வேரூன்றி விட்டது என்பது புலப்படும்.வன்முறை மிக்க குடும்ப, சமூக பிரச்சனைகளின் தூண்டியாக மதுபாவனை அமைந்திருப்பது நாம் அனைவரும் வேதனையுடன் அவதானிக்கும் ஒரு விடயமாகும். ஊட்டசத்துக்களோ விற்றமின்களோ எதுவுமற்ற திரவத்தை உற்சாகம் தரும் பானமாக களைப்பையும் உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக அற்புத சக்தியாக எண்ணி மதுவில் கட்டுண்டு இருக்கிறார்கள். இன்று சிறியவர, பெரியவர் வேறுபாடின்றி பெரும்பாலானோர் தமது ஆரோக்கியமான வாழ்கையையும், இன்பமான மகிழ்ச்சியான குடும்பங்களையும் குடும்ப கட்டுமானங்களையும் தொலைத்து கடனாளியாகவும் நோயாளியாகவும் அலைந்து திரிகின்றனர்.அவர் தம் கெடுதலும் அன்றி வருங்கால சந்ததியினரையும் இந்த பாழாங் கிணற்றில் இழுத்து விடுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். ஒரு வித ஆர்வ கோளாறுகளால் கெட்ட நண்பர்களாலும் எண்ணங்களாலும் மூடிகளில் ஆரம்பிக்கும் இவர்கள் போத்தல்களை மூடத்தெரியாது திணறுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டே உள்ளனர். சாராயம் மற்றும் போதை மருத்துகள் உட்கொள்வதால் போதை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து அவர்களை அழித்து விடுகிறது.போதை பொருள் பாவனையால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் ஒருவர் போதை வஸ்து பாவிக்காமல் இருந்தால் அவரை இச் சமூகமும் ஏளனமாக பார்க்கின்றது. மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலின் அனேக தொகுதிகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றது. ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் புரதத்தொகுப்பு, நஞ்சகற்றல் தொழிற்பாடு, குருதியுறைதலிற்கு அவசியமான பதார்தங்களின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்படும். குடற்புண்கள், இரத்தவாந்தி, இரத்தவயிற்றுப்போக்கு, சதை அழற்சி என்பன ஏற்படலாம். உடலில் நச்சுப்பதார்தங்களின் சேர்க்கையால் இவ் நச்சுப்பதார்தங்களே பல தொகுதிகளில் அல்லது உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம். பலவீனமான இதயம் மற்றும் குருதிச் சுற்றோட்டத் தொகுதியால் இதயத்தாக்கு மற்றும் உயர் குருதியழுத்தத்திற்கு உட்படுதல். மூளை மற்றும் சுற்றியல் நரம்புகளில் தற்காலிக மற்றும் நிரந்தர பாதிப்புக்கள். பலவீனமான நீர்ப்பீடனத் தொகுதியும் உடற்சுகாதாரம் குறைந்த நிலையும் பலவிதமான தொற்றுநோய்களிற்கு உட்படுத்தும் ஆண்குறி விறைப்பின்மை மலட்டுத்தன்மை போன்ற பாரிய பாலியல் ரீதியான பிரச்சனைகளிற்கு இட்டுச்செல்லல்.

இன்றைய இளைஞர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.இதனால் மதுவிற்கு அடிமையாதல், மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல் பதகளிப்புக்குள்ளாகல் நித்திரையின்மை உளமாய நோய்களுக்குள்ளாகல் வலிப்பு ஏற்படுதல் போன்ற உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் குடும்பத்தில் வன்முறைகள்சி, றுவர் துஷ்பிரயோகங்கள், குடும்பத்தில் நிம்மதியின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சனைகள், விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.

இப் பழக்கவழக்கங்கள் விசேட தினங்களில் வீடுகளில் மது பரிமாறப்படுதல், விளம்பரங்கள், திரைப்படங்களை பார்வையிடுதல், மதுவின் விளைவுகள் பற்றி தவறான நம்பிக்கை எண்ணங்களை கொண்டிருத்தல், நண்பர்கள் வற்புறுத்துதல், பிரபலங்களின் தவறான எடுத்துக்காட்டு, மேலைத்தேய நாகரிகத்தின் மோகம் என்பனவற்றால் தூண்டப்படுகின்றன. சிலர் உடல் அலுப்பு / நோ, மனச்சோர்வு, பதகளிப்பு, கோபம், குற்றவுணர்வு, தனிமை, தாழ்வு மனப்பான்மை, உறவுச்சிக்கல்கள் என்பவற்றுக்கு மது, போதைவஸ்து, சிகரெட் தான் தீர்வாகும் என தவறான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.குடிப்பதால் உடலுக்கு சக்தியும் தெம்பும் உற்சாகமும் நல்ல தூக்கமும் கிடைக்கின்றது என நினைக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குடிப்பழக்கத்தால் உடல் சக்தி குன்றிஇ உடல் உறுப்புக்கள் பழுதடைந்துஇ குடி நோயாளி ஆகின்றோம்.குடியில் மயக்கம் மட்டுமே ஏற்படும் அது தூக்கமல்ல. மூளையில் ஏற்படும் சிந்தனை குறைவு ஏற்பட்டு சமநிலை குறைவுமான தன்மையும் ஏற்படும்.கொஞ்சம் குடிப்பதனால் உடல் ஆரோக்கியம் கூடும் நிறைய குடிப்பது தான் உடலை பாதிக்கும். என சிலர் நினைக்கின்றனர்.குடிபான வகைகளில் தன்மை எப்பொழதுமே பாதிக்கும். மேலும் அளவீடுகளின் அடிப்படையில் நிறுத்தி கொள்ளல் என்பது யதார்த்தத்தில் பெரும்பாலும் தோல்வியுறும் செயற்பாடாகும்.

பெரும்பாலானோர் கள்ளு உடலுக்கு நல்லது என கூறி அதனை அருந்துகின்றனர். கள்ளு பாவனை ஈரலில் சல கூடு தோன்ற செய்யும். இது கடும் வயிற்று வலியுடன் வெளிவரும். மேலும் ஈரலில் நிரந்தர பாதிப்பினை உருவாக்கும். குடிப்பவர் குடிக்காத போது கைஇகால் நடுங்குமாயின் கொஞ்சம் குடிக்கலாம். இது உண்மையில் ஒரு பாரதூரமான நிலைமையாகும். அப்படியானவர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில் இருக்கிறார்கள்; உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.குடிப்பதனால் நன்றாக வேலை செய்ய முடிகின்றது. நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள்;. இதெல்லாம் ஒரு மாயையாக தான் காணப்படும். இது நிரந்தரமற்ற ஒரு போலி நட்பாக தான் அமையும்.எனது கணவர், மகன் கொஞ்சம் குடிப்பார் அவரால் ஒரு சண்டை சச்சரவு சத்தம் போடுதல் எதுவும் இல்லை.வீடு வந்து தூங்கி விடுவார்கள்.இது பொதுவாக மனைவி மார்களால் குடும்ப உறவினர்களால் பெற்றோரால் கூறப்படுவது. ‘ஆணைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே’, ‘வெள்ளம் வருமுன் அணை கடடுங்கள்’. இழப்பும், சேர்கமும், தடுமாறும் குடும்ப வாழ்நாள் இறுதியில் உங்கள் கண்களுக்கு தான் கண்ணீர்இமறவாதீர்கள். ஒவ்வொருவரும் சிறுமூடியில் ஆரம்பித்து தான் போத்தல் வரை பழக்கப்படுத்தி கொள்கின்றனர். ஆண்கள் தான் குடித்து சீரழிகின்றார்கள் என்றால் இன்று பெண்களும் சிறுவர்களும் கூட குடிக்கு அடிமையாகி கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்குவதற்கான அறிகுறிகளாக கை, கால் நடுக்கம், காலையிலேயே குடிக்கத் தொடங்குதல், ஓங்காளம், நித்திரையின்மை, மாயப்புலனுணர்வு, வியர்வை, பயம் என்பனவாகும். வலிப்பு மற்றும் மாறாட்டக்குணம் உடையவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தல் அவசியம். இந்நிலையை உதாசீனம் செய்தல் உயிரை கூட மாய்த்து விடலாம். ஓடியாடி சிரித்து மகிழும் வயதில் குடி சிகரெட் கஞ்சா என இன்றைய இளைஞர்கள் மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்.கல்வி கற்க வேண்டிய வயதில் சாதிக்க வேண்டிய வயதில் இளைஞர்கள் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இளைஞர்கள் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய இளைஞர்கள் குடித்து குடித்து சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள்.இளைஞர்கள் இவ்வாறு குடித்து சீரழிவதால் அவர்களுடைய குடும்பமும் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகுவதால் பெரும்பாலானோர்கள் சில சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.குடிப்பதற்கு பணம் இல்லாவிட்டால் கடன் வாங்குதல், களவெடுத்தல், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடித்தல் இவ்வாறான செயற்பாடுகளால் குடும்பங்களுக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். 80% ஆண்கள் 20% பெண்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை சமர்ப்பத்துள்ளது. உலகளாவிய பரவி வரும் போதைப்n;பாருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987ம் ஆண்டு ஆனி 26ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப்  பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஊசி முலம் போதை ஏற்றப்படுகின்றது. ர்ஐஏ நோய் பரவிக் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

போதைப் பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது. இது 71% ஆக காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இது 22% ஈக காணப்படுகின்றது. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 600 000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்கள். 1980 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஹெரெர்யின் எனும் பேர்தைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புண்ர்வுக்கு காரணமும் இந்த போதைப் பொருள் தான்.வவுனியாவில் ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதும் போதைப் பொருள் பாவிக்கப்பட்டவர்களாலே தான். போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். ஜபல் கலைகழகம்,  உயர்தர, சாதாரணதர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள். இதில் 50% இல் 69% ஆனவர்கள் பாடசாலை மாணவர்கள். இது சுகாதார அமைச்சின் அறிக்கை. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடமாகாணம் போதைப் பொருள் பாவனையால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றது.

காச நோய், இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்கள், தொற்றா நோய்கள், போன்றவற்றுக்கு ஒரு காரணமாவும் அமைகின்றன. சிறுநீரகம் இழக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கசிப்பு. போதையினால் ஏற்படுகின்ற விளைவுகள் பல்வேறுபட்ட உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது.

பல்வேறுபட்ட நோய்களுக்கு காரணமாகின்றது. மகிழ்ச்சியை மறைத்தல், வறுமை, குடும்ப பிரச்சனைகள், பிள்ளைகளது கல்வி நிலை பாதிக்கப்படுதல், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுதல், பாரிய வீதி விபத்துகளுக்கு காரணமாக விளங்குதல், பாரிய குற்றச் செயல்களுக்கு முதற் காரணமாக விளங்குவது கொலை, கற்பழிப்பு, கொள்ளை. இதன் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

ஆகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இறுக்கமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டும் – வீதி பாடகங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் முலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல். மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலீஸ் திணைக்களம், பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மது வரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன. போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு வழிகளாக பாவனையின் பாதிப்புக்களை நன்கறிந்து கொள்ளல்இ தான் பாவனை செய்வதில்லை என சபதம் எடுத்தல் வேண்டும்.இவிழிப்புணர்வை பல மட்டங்களிலும் ஏற்படுத்தல் வேண்டும். மாற்றீடான நல்ல பல பொழுது போக்கு மற்றும் கேளிக்கைகளை வளர்த்துக் கொள்ளல், பாவனையால் வரும் வீண் விரயத்தை உணர்ந்து அதற்குரிய செலவை சேமிப்பாக மாற்றுதல், வீடுகளில் நடைபெறும் விசேட தினங்களில் பாவனையை குறைத்து தவிர்த்து நல்ர விடயங்களில் செலவழித்தல், பாவனையாளரை தலைமைப்பதவியில் அமர்த்தி பொறுப்புணர்வை ஏற்படுத்தல். பாவனைக்கு வற்புறுத்தப்படும் பட்சத்தில் வேண்டாம் இல்லை என சொல்ல பழகுதல்.என்பனவாகும்.

இன்றைய இளைஞர்கள் குடியுடன் கூடிய குடும்ப வன்முறைகள் மற்றும் கலாச்சார சீரழிவுகளிலிருந்தும் எமது சமுகத்தை பாதுகாப்பதற்கு போதை வஸ்துக்களை குறைப்பதற்கான வழி வகைகளை மேற் கொள்ள வேண்டும். குடி நேபயிலிருந்து மீட்டெடுக்க வைத்தியசாலைகளில் நட்பு நிலையம், உளநல பிரிவு அது சார்;ந்துள்ள ஏனைய துறைகளுடன் கை கோர்த்து செயற்பட்டு வருகிறது. எனவே போதையற்ற வாழ்க்கையின் மகிமையை அறிந்து எமது சமுதாயத்தை இளைஞர்கள் வளர்சி பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

‘குடி குடியை கெடுக்கும்’

–  மா.சஜீவனா
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *