ஆளுமை மற்றும் அறிவாற்றல் நோக்கில் குற்றவியல் நடத்தை

– S.Ithayatheepan – Working paper – 22

குற்றவியல் நடத்தை, உளவியல் பற்றிய அறிவியல் படிப்புகளின் ஆரம்பமானது. அது சில வாதத்திற்குரிய வினாக்களை எழுப்புகின்றது. ஒரு குற்றத்திற்கான காரணத்தை ஒருவருடைய ஆளுமையுடன் தொடர்புபடுத்த முடியுமா? அடிப்படை ஆளுமை முறையில் குற்றவாளிகளும் தவறிழைப்போரும் சட்டத்தைப் பின்பற்றுவோரிடமிருந்து மாறுபட்டவர்களா? உணர்ச்சி பூர்வமான செயல்பாடு, மூர்க்கத்தனம், உணர்வுகளால் தூண்டப்பெறல், புரட்சித்தன்மை, மற்றும் வெறுப்புணர்வு ஆகிய ஆளுமைப் பண்புகள் போன்றவை மூலம் குற்றம் மற்றும் தவறுகள் வெளிப்படுகின்றனவா?

ஆளுமையும் குற்றவியல்; நடத்தையும் சுயகட்டுப்பாடும் குற்றமும் மூர்க்கத்தனமும் குற்றமும் ஆளுமை சார்ந்த விபர பட்டியல் எம்.எம்.பிஜ அறிவாற்றலும் குற்றவியல் நடத்தையும்; இளங்குற்றவாளிகளின் குறித்த குலுவர்கஸின் ஆய்வு போன்ற விடயங்களை விளங்கிக் கொளவதனுடாக ஆளுமை மற்றும் அறிவாற்றல் நோக்கி;ல் குற்றவியல் நடத்தையினை விளங்கிக் கொள்ளலாம்.

ஆளுமையும் குற்றவியல் நடத்தையும்
ஆளுமை என்பது நியாயமான திடமான நடத்தை முறை எனப்படும். ஓருவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தும் எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியன அதில் அடங்கியிருக்கும். ஆளுமைப்பண்பு என்பது நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடச் செய்கிறது. தேவையான சரியான தேர்வுகளைப் பெற்று அவற்றை வாழ்க்கையின் தேவைகள் மற்றும் சிக்கல்களில் செயல்படுத்த முடியுமென்பதை எண்ணவும் நடக்கவும் செய்கின்றது.

குற்றம் என்பது சமுதாயத்திற்கும் தனிநபருக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு சமுதாய எதிர்ப்பு நடத்தையாகும். குற்றம் சமுதாயத்திற்கு எதிரானதாகவும் ஒழுக்கக்கேடானது என வரையறுததாலும் புகழ்பெற்ற வழக்கறிஞரான பாலதாப்பன் என்பவர் குறிப்பிடுகையில் குற்றம் சட்டத்தை மீறிய வகையிலும் தற்காப்பு அல்லது நியாயப்படுத்தும் சூழல் ஆகிய இரன்டும் அல்லாத நிலையில் புரியப்பட்டதும் சட்டத்தால் ஒரு பெருங்குற்றமாகவோ சிறுகுற்றமாகவோ தன்டிக்கப்படத்தக்கதுமான கருத்துடன் கூடிய ஒரு செயல் அல்லது செயல் தவிர்க்கையே குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உளவியலாளர்கள் குற்றவாளிகளை தெளிவாக விளக்க முயல்கின்றனர். அத்தகைய மனிதர்களுடைய குற்ற எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது மாற்றப்பட்டு அவர்களுடைய குற்றமிழைக்கும் பண்புகள் தவிர்க்கப்படலாம்.

குற்ற ஆளுமைகள்
குற்றவாளிகள் ஆளுமைகளின் அடிப்படையில் கீழ்காணும் குழுக்களாகப் பகுக்கலாம்.

1. சமூகப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்
இவர்கள் சாதாரணமான இயல்புடைய மனிதர்களைவிட உணர்ச்சிகளால் அமைதியை இழந்தவர்கள். பலதரப்பட்ட மதிப்பீடுகளை உணர்த்தவல்ல சமூக நிலையில் குற்றவாளிகளாக உருவாகின்றனர். வலிமையான குற்றவாளிகளைவிட பிறரை மனதை புண்படுத்தக் கூடியவர்களாக இருப்பதை பெரிதும் விரும்புகின்றனர்.

2. நரம்பியல் குற்றவாளிகள்.
இத்தகைய நபர்கள் ஆளுமையின் விளைவாக எழும் சிதைவுகள் அல்லது அவர்களுடைய கருத்துப்படி அவர்களைச் சுற்றியுள்ள உலகிலுள்ள சிதைவுகள் மூலம் குற்றவாளிகளாகின்றனர். திருட்டு இச்சையுடையவர்கள் கடைத்திருடர் மற்றும் பலர் நரம்பியலியல் ஈடுபாடு காரணமாக குற்றம் செய்பவர்களாக மாறுகின்றனர்.

3. நிலைக்குற்றவாளிகள்
இப்பிரிவினர் தமது சமூகம் மற்றும் உலகம் பற்றிய மனச்சிதைவு தரும் ஆளுமை வேறுபாடுகளால் வெளிப்படுகின்றனர். அவர்கள் இதே உலகத்தில் வாழ்ந்தாலும் உண்மையுடன் தொடர்புடையவர்கள் அல்ல. சமூகப்படுத்தப்பட்ட குற்றவாளிகளைப் போல மனநிலைக் குற்றவாளிகள் தமது குற்றங்களைத் திட்டமிடுவதில்லை. பிறகு புதுமையானதாக மற்றும் அறிவற்றதாக உள்ள மூர்க்கமான செயல்களுக்கு இலக்காகக் கூடியவர்கள்.

4. சமூகநிலை தவறிய குற்றவாளிகள்
இவர்கள் விசித்திரமான பிரிவினர். பெரும்பாலான சமூகப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் சமூகத்தன்மை உணர்வுடையவர்கள். அதிக அளவில் மூர்க்கமான குற்றவாளிகள் சமூகத் தன்மை கொண்ட இருபண்புகளின் இணைப்பாக உள்ளனர். பெரும்பாலான பதவியிலுள்ளோர், அரசியல் குற்றவாளிகள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் நிந்திக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகியோர் சமூகத் தன்மை கொண்ட ஆளுமை குணநலன்களைக் கொண்டவர்கள்.

The Criminal Personality (1977) என்ற நூலில் யோக்கெல்சன் மற்றும் சாம்னெவ் தமது ஆய்வுகள் மூலம் வாஸிங்டன் டி.சி. பகுதியில் 225 முறையமைவேர்டு அமைந்த குற்றவாளிகளை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் 52 வகையான குற்ற எண்ணத்துடன் குற்றம் செய்பவர்களை உருவாக்குபவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் சிலர் நோய்வாய்ப்பட்டோர், கடுமையான நம்பிக்கை பெரும்சக்தி, காயம் பற்றிய பயம், ஆழ்ந்த கோபம், கையாளும் தன்மை கொண்டோர், இத்தகைய ஆளுமைப்பண்புகள் பொது மக்களைவிட குற்றவாளிகளிடம் அதிகம் காணப்படும் என இறுதியாக கூறிடவும் இயலாது.

சுய கோட்பாடும் – குற்றமும்
குற்ற நடத்தையில் குற்றவாளியில் சுயகோட்பாடு ஒரு முக்கியமான பண்பாகும். உடலால், பாலுணர்வால், மன உணர்வினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறைவான சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுவார்கள். இத்தகைய குணங்கள் இளைஞர்களுக்கு இருக்கும்போது வயது முதிர்ந்த நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட வர்களாக மாறுகின்றனர். தம்மை தகுதியற்றவர்கள், சிறுமையுடையவர்கள் என எண்ணுவோர் தமக்கு என்ன நேருகின்றதென்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இத்தகைய சமூக உளவியல் ஆற்றல்கள், தனிமனிதர்களை, போதை மருத்துண்ணல், தீவிரவாதம் உள்ளிட்ட குற்றம் போன்ற அழிவு நடத்தைகளுக்கு தள்ளுகின்றன. இதனால் அதிக அளவில் கீழான சுயமரியாதை கொண்டவர்களாகின்றனர். அவர்கள் தமக்கு குற்றங்கள் செய்பவர்களைப் பற்றி சீற்றம் கொள்கின்றனர். தம்முடைய பெரும்பான்மை கருமத்தை பகையுணர்வு கொண்;டவர்கள் மீது அழிவு நடத்தைகளாகப் பிரதிபலிக்கின்றனர்.

சுயக்கட்டுப்பாடும் குற்றமும்
மைக்கேல் காட்பிரட்சன் மற்றும் ட்ராவின் ஹிர்ஸ ஆகியோர் தம்முடைய யு புநநெசயட வுhநழசல ழக ஊசiஅந என்ற நூலில் ‘சுய கட்டுப்பாடு என்னும் ஆளுமைப் பண்பு ஒரு தனிநபர் குணவியல்பெனவும் அது அவர்களை அனைத்துக் காலப்பகுதிகளிலும் குறைவான குற்றங்களில் ஈடுபட வைக்கும். குறைவான சுயகட்டுப்பாடுடையவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக ஆவர் எனக் கூறுகின்றனர். தேவையான அளவு சமூக மயமாக்கல் இன்மை என்பது தவறு செய்யும் இளைஞன் முதல் பணிபுரிவோர் வரை பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. சமூகமயமாக்கல் என்பது ‘சட்டம் ஒழுங்கு மற்றும் பயிற்சி இன்மையே’ எனவும் விளக்கப்படுகிறது. குற்றததிற்கான சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளின் தாக்கம் நடத்தைகள் மீது ஏற்படுகையில் நடத்தையானது குற்றம் பற்றிய முழுக்கோட்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளதென்பதை உணரலாம்.

மூர்க்கத்தனமும் குற்றமும்
ஏமாற்றம் தரும் சூழல்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியானது மூர்க்கமான மற்றும் வன்மை மிக்க செயல்களுக்க இட்டுச் செல்வதற்கு காரணமாக அமையும். ஆனால் வன்மைமிக்க நடத்தையானது ஏமாற்றம் காரணத்தினால் மட்டும் எழுவதில்லை. ஏமாற்றமானது வன்மையான நடத்தைக்கு வழிவகுக்கும் போது அந்நடத்தையை ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு செயலாக நெறிப்படுத்தலாம். 1982ல் எமகார்ஜி என்பவர், ஒரு தனிநபர் வன்மையாக ஒரு சூழலில் ஈடுபடுவாரா? என்ற நோக்கில் கீழ்க்கண்ட தீர்மானிப்புகளை இனம் கண்டுள்ளார்.

வன்முறைத் தூண்டுதல் : ஒரு மனிதரை வன்முறையான கடுமையான செயல்களைச் செய்யத் தூண்டும் அனைத்துக் கூறுகளும் முழுமையானவை.

பழக்கங்களின் வலிமை: குறிப்பிட்ட வன்முறை நடத்தையைப் பயன்படுத்த உதவும் அறிவார்ந்த தெரிவுகள்.

வன்முறைக்கான எதிர்ப்புணர்வுகள்: குறிப்பிட்ட இலக்கினை எட்டுவதில் பயன்படும் அறிவார்ந்த தேர்வுகள்.

தூண்டல் காரணிகள்: சூழ்;நிலையின் தாக்கங்கள் தடைசெய்யும் ஆன்றோர் உதவி செய்யும் அறிவுபூர்வமான தேர்வுகள்

போட்டிகள்: பலதரப்பட்ட துலங்கல்களுக்கு ஏற்ப ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனுடைய தேவைகளை சரியான வழியில் பெறுதலுக்காக ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தல்.

ஆளுமை பற்றிய விபரப் பட்டியல்கள்:
உளவியல் சோதனைகளில் மேற்கொள்ளப்பட்டவற்றுள் ‘மின்சோட்டா பல படிநிலை ஆளுமை விபரப்பட்டியல்’ (MMPI) விரிவானதொன்றாகும். வயது வந்தோரின் மனோவியாதிகளின் பல மாதிரிகளை உடைய வழிதவறிய ஆளுமையைப் பற்றி அறியும் நோக்குடன் ஸ்டார்க் ஹர்த்வே (1930) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. மனவியல் நோக்கினாலான பல சிக்கல்களால் கஷ்டப்படும் பிரிவினரை, சாதாரண மக்களிடமிருந்து பிரித்துப் பார்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட 556 – சரி – தவறு வழிகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது. இதில் 10 மருத்துவமனை அளவு கோல்கள் உள்ளன. குறறவாளிகள் மற்றும் தவறு செய்வோரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காண்பதில் மூன்று அளவுகோல்கள் முக்கியமானவை.

1. உளவியல் சார்புடைய விலகிச் செல்லும் அளவுகோல் – அதிகாரப பிரிவுனருடன் சண்டையிடல் மற்றும் அடித்தளத்திலுள்ள தனிப்பட்ட விருப்பங்கள்.

2. மனோவியாதி அளவுகோல் – விசித்திரமான எண்ணங்களையும் விளைவுகளையும் சுயதொடர்புகளினின்றும் திரும்பப்பெறல்.

3. அடித்தள மனவியாதி அளவுகோல் – உற்பத்தியில்லாத உயர்செயல்.

கலிபோர்னியா மனவியல் பட்டியல் (CPI)
இது மற்றொரு உளவியல் சோதனை முறை. இச்சோதனையானது உளவியல் சமுதாயத்தில் ஆளுமைக் குறிப்புகளைத் தருவதற்காக உருவாக்கப்பட்டது. மனினிசோட்டா விபரப் பட்டியலுடன் பெரிதும் இயைபுடையது. ஏனெனில் அதில் பாதியளவினதான சரி – தவறு சொற்றொடர்கள் மினிசோட்டா மயமாக்கல், பொறுமை, உறுதியான செயல்கள், சுயமாகப் பெறப்பட்ட செய்கைகள், அறிவாற்றல் திறன் ஒன்றாக இருக்க வேண்டுமென்று உணர்வு, சுயக்கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுறு தன்மை ஆகியவற்றை கலிபோர்னியா உளவியல் பட்டியல் கொண்டுள்ளது. இவை போன்ற 18 அளவுகோல்களில் மூன்று மட்டுமே குற்றம் புரிவோர் மற்றும் குற்றம் புரியாதோரிடையே மாற்றங்களை உருவாக்குகின்றன.

1. பெறுப்புக்கள் பற்றிய அளவுகோல்
மனச்சாட்சிப்படி நடப்பவர், நம்பிக்கைக்குரியவர், சட்டம் ஒழுங்குபற்றி தெளிவாகத் தெரிந்தவர், வாழ்க்கை ஒரு காரணத்திற்காக வேண்டுமென்பவர் ஆகியோரைப் புரிந்துகொள்ள விழைதல்.

2. சமூகமயமாக்கல் அளவு கோல்
அவன் / அவளின் பண்பாடு காரணமாக உருவாக்கப்பட்ட விதிகளை மீ|றுதல் பற்றி முன்னறிவித்தல்.

3. சுயகட்டுப்பாட்டு அளவு கோல்
சுயகட்டுப்பாடுகள், மனிதன் உள் உந்துதல்களிலிருந்து விடுதலை மற்றும் சுயமாக இயங்குதல் ஆகியவற்றின் போதுமான தன்மைகளை மதிப்பீடு செய்தல்

மினிசோட்டா பல படிநிலை ஆளுமைப்பட்டியல் மற்றும் கலிபோர்னியா மனவியல் பட்டியல் ஆகியவற்றின் பயன்பாடான குற்றவாளிகளை குற்றமற்றவர்களிடமிருந்த பிரித்துக் காட்டும் பண்பினைப் பற்றி உளவியலாளர் வினா எழுப்புகின்றனர். மினிசோட்டா படிநிலை ஆளுமைப் பட்டியல், குற்றவாளிகளின் கடந்தகால நடததை பற்றியவற்றை உள்ளடக்கி உள்ளது. குற்றவாளிகளுக்கும் குற்றமற்றவர்களுக்குமிடையில் உள்ள மாறுபாடுகளை பரிசோதனைகள் வெளிக்காட்டுகின்றன. ஆனால் இவ் வேறுபாடு, உண்மைப் பண்புகளை சிறிய அளவே வெளிப்படுத்துகின்றன. 18 கலிபோர்னியா மனவியல் பட்டியலில் காணப்படுவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. மேலும் அவை ஆளுமைப் பண்புகளை அளவிட உதவும் சுதந்திரமான அலகுகளாக உள்ளன. ஒரு அளவீட்டில் உள்ள குறிப்பு மற்றொரு அளவீடு தரும் குறிப்பாக உள்ளது. ஆனால் அவை மாறுபட்ட ஆளுமைப் பணபுகளின் அடிப்படைகளைத் தருபனவாக எண்ணப்படுகின்றன.

இத்தகைய தோற்றங்கள் அனைத்தும் மாறுப்பட்ட தன்மைகளில் உருவாக்கப் பட்டமையால் தவறாக உள்ளன என்று குற்றம் பற்றிய ஆளுமை கோட்பாடுகளின் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பதிலும் மாறுபாடு உள்ளது. உண்மையில் குற்றவியல் என்பதை தொடர்ந்து வருபவை என்ற நிலையில் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் எல்லா நேரங்களிலும் குற்றவாளிகளாய் இருக்கின்றனர். வேறு சிலர் எப்போதுமே சட்டங்களைப் பின்பற்றுபவர்களாகவும் உறுதி செய்பவர்களாகவும் உள்ளனர். பெருமளவு குற்றவாளிகள் உளவியல் நோக்கில் இயல்பான தன்மை உடையவர்களாகவே இருப்பர். அவ்வாறு உளவியல் நோக்கில் இயல்பான தன்மையற்றவர்கள் ஒரு சிறிய அளவினர்களாகவே இருப்பர்.

அறிவாற்றலும் குற்றவியல் நடத்தைகளும்
மனத்தவறு பற்றிய கோட்பாடுகள் : குற்றவாளிகள் சட்டம் பற்றிய காரணங்களை அறியாமையால் அதனை மீறுகின்றனர். சட்டத்தை அவர்கள் அறிந்திருப்பர்களாயின் தமது செயல்களைத் தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பார்கள்.

குறைந்த அளவு அறிவாற்றல் கீழ்க் காண்பனவற்றுடன் தொடர்பு கொண்டு குற்ற நடத்தைகளுக்கு இட்டுச் செல்லும்.

1. பள்ளி மற்றும் பணியில் வெற்றி பெறாமை சமூக பொறுப்புகளுக்குக் காரணமாக அமையும்.
2. முன்னோற்றத்திற்கு திறனின்மை மற்றும் உடனடி இலாபம் மீதான ஆசை.
3. வலி மற்றும் சமூகத் தவிர்ப்பு ஆகியவற்றில் நடைமுறைககு அப்பாற்பட்ட நெருக்கத் தன்மை.
4. சட்டத்திற்கு கட்டுப்படும் ஒழுக்க நெறிக் காரணங்களைப் புரிந்து கொள்ளாமை. பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படாதவர்கள், சட்டங்களைப் புரிந்து கொண்டு, நல்ல முடிவுகளை எட்டி தமது நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பர்.

அறிவாற்றல் ஈவு சோதனைகளும் குற்ற நடததைகளும் :
குற்றம் மற்றும் அறிவாற்றல் தொடர்பான ஆய்வுகள் அறிவாற்றல் ஈவு தொடர்புடையனவாக உள்ளன. அறிவாற்றல் ஈவுதனை உணர்ந்துகொள்ள மூன்று வழி முறைகள் உள்ளன.

1. அறிவாற்றல் ஈவு என்பது காணவியலாத காரணங்கள் அல்லது சிக்கல்களைத் தவிர்;த்தலுக்கான ஆற்றல் பற்றிய அளவீடுகளாகும். இவை பெரிதும் பரம்பரையாகப் பெற்ற திறமையாகும்.

2. அறிவாற்றல் ஈவு என்பது உடனுறையும் ஆற்றல்களை அளவிடுவதல்ல. அதற்கு மாறாக அத்தகைய மதிப்பீடானது முன் நி;ற்கும் பண்பாட்டுடன் தொடர்புடையது.

3. அறிவாற்றல் ஈவு பொது ஆற்றல்களை மதிப்பிடுவது அத்தகைய ஆற்றல்கள் மனிதனின் சூழல்களாலேயே பெரிதும் தீர்மானிக்கப்படுகின்றது.

அறிவாற்றல் பொருள், ஈவு பற்றி அவன் – அவள் எடுக்கும் முடிவானது தான் அறிவாற்றல் ஈவு மற்றும் குற்றம் பற்றிய தொடாகளை மதிப்பீடு செய்ய உதவும்.

ஏராளமான குற்றவியலாளர் தவறிழைப்போர் குறைவான அளவு அறிவாற்றலை உடையவர்கள் என்று எண்ணத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் குறைந்த அளவு அறிவாற்றல் ஈவுதான் அவர்களுடைய குற்றங்களுக்குக் காரணமாகும். உறுதியான அறிவாற்றல் ஈவு தொடர்புதனை முக்கிய குற்றவியலாளர் தவிர்க்கின்றனர். ஆனால் மதிப்புமிக்க குற்றவியலாளர்களான ட்ராவிஸ் ஹிர்ஷி மற்றும் மைக்கேல் ஹிண்டலாங் ஆகியோர் 1977ல் வெளியிட்ட இரு வேறுபட்ட பண்புகளின் இணைப்பு பற்றிய கட்டுரையானது அறிவாற்றல் ஈவுதனை மீண்டும் முக்கியமானதாகச் செய்தது. குற்றம் மற்றும் தவறுகளை உள்ளிட்ட இடம் அல்லது சமூகப் பொருளாதார பிரிவுகளை விட அறிவாற்றல் ஈவு முக்கியமானது என்று கூறியுள்ளனர். ஒரே இனம் மற்றும் சமூகப் பொருளியல் பிரிவினருள் குற்றம் செயபவர், குற்றம் செய்யாதவர் ஆகிய பெரும் பிரிவுகள் உள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளனர். குறைந்த அளவு அறிவாற்றல் ஈவு உடைய இளைஞர்களுடைய பள்ளிகளில் சாதனையற்றவர்கள் என விவரிக்கின்றனர். அவ்வாறு பள்ளி நிலையில் ஏற்படும் தோல்விகள், படிப்பு சார்ந்த தகுதியின்மை ஆகியன தவறுகளுடன் நெருங்கிய தொடாபுடையனவாய் பிற்கால வயதுவந்தோர் குற்றங்களுக்குக் காரணமாகின்றன. ஆனால் சமீப காலத்தில் அமெரிக்க உளவியல் அமைப்பு, அறிவாற்றல் நிலையில் இன்றுள்ள அறிவாற்றலை மதிப்பீடு செய்யும்போது அறிவாற்றல் ஈவு மற்றும் குற்றங்களுக்கிடையிலான மிகக் குறைவான வலிமையுடையவை என்பதற்கான குறிப்பீடுகள். அறிவாற்றல் ஈவு மற்றும் குற்றம் பற்றிய வாதங்கள் எளிதில் முடிவடையக் கூடியதல்ல. குற்றம் செய்வோர் பொதுமக்களை விட குறைந்த அளவு அறிவாற்றல் ஈவு உடையவர்கள் என்பது சுட்டிக் காட்டப்பட்டாலும் பலதரப்பட்ட குற்றங்களின் அளவீடுகளை விவரித்தல் கடினமானதாகும்.

ஏன் ஆண் குற்றவாளிகள் பெண் குற்றவாளிகளை விட அதிக அளவில் உள்ளனர்? ஏன குற்றங்களின் எண்ணிக்கையானத இடம், காலம், காலவியல் தன்மைகளுக்கு ஏற்ப மாறுகின்றன? அறிவாற்றல ஈவுகள் ஏன் காலத்துடன் வளர்ச்சியடைவதில்லை? ஏன் குற்ற எண்ணிக்கைகள் குறைவதில்லை?

இளம் குற்றவாளிகள் குறித்த குலூவக்ஸின் ஆய்வு
ஷெல்டன் மற்றும் எலியனார் குலூவக்ஸ் ஆகியோர் 1952ல் 500 தவறு செய்யும், 500 தவறு செய்யாத சிறுவர்களை ஒப்பிட்டு ஒரு ஆழ்ந்த ஆய்வினை வெளியிட்டனர். அவர்கள் சில குணவியல்புகளின் இருப்பு அல்லது இல்லாமை என்பது முக்கியமானதல்லவென்று வாதிட்டனர். ஆனால் அவை குணப்பாங்குகளின் ஒன்றொடொன்று தொடர்புடைய தன்மை சார்ந்தது என்றனர். அவர்கள் தமது முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்தளித்துள்ளனர்.

தவறிழைப்போர் பெரிதும் எதிர்ப்பாளர்களாக உற்காசமுள்ளவர்களாக தீடீர் உணர்ச்சி உடையவர்களாக குறைந்த அளவு சுயகட்டுப்பாடு உடையவர்களாக தவறிழைக்காதவர்களை விடக் காணப்படுவர். அவர்கள் பகைமையுணர்வு, கோபங்கொள்ளல் உடையவர்களாக இருப்பார்கள். தோல்விகளைக் கண்டு துவளாதவர்களாக அலலது தவறிழைக்காதவர்களைவிட தோல்வியற்றவர்களாக இருப்பர். அவர்கள் மரபு வழியான எதிர்பார்ப்புகளைகச் சந்திப்பதில் அக்கறை குறைவானவர்கள். அதிகாரத்;திற்குப் பணிய மறுப்பவர்களாக மாறுபட்ட குணப்பாங்குகளை உடையவர்களாக இருப்பார்கள். ஒரு குழுவாக சமூக அளவில் அழுத்தமடையவர்களாயிருப்பர். பெருமளவு குழுகட்டுப்பாடுகளை விட தாம் ஏற்கப்படவில்லை அல்லது தனித்து தான் சிறப்பாக பாராட்டப் படவில்லை என்ற உணர்வடையுவர்களாயிருப்பர்.

குலூவக்ஸ் சகோதரர்கள் தமது ஆய்வுகள் அடிப்படையில் ஐநது நிலை அளவு கோல் மூலம் தவறு செய்வோர் மற்றும் தவறிழைக்காதோர் ஆகியோரை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்துகின்றனர்.

1. உடல் சார்ந்தவை : உடலமைப்பில் திசுக்களைக் கொண்டவை, பருமனுள்ளவை மற்றும் நெருக்கமாக இணைக்கப்பட்ட மற்றும் தசை சார்புடையவை.

2. மனநிலை சார்ந்தவை : அமைதியின்மை, சக்திமிக்கவை, உணர்வு பூர்வமானவை, எதிர்ப்பு, மூர்க்கத்ன்மை, அழிவு தவறான வளர்ச்சி.

3. உணர்ச்சிவசமானவை : எதிர்ப்பு மனப்பான்மை, எதிர்ப்புணர்வு நிலை, சந்தேகம், பிடிவாதம், திர்த்தல், உறுதியியரத்தல், துணிகரச் செயல்,ஈடுபாடு சமூக மற்றும் மரபுசாராமை.

4. உளவியல் சார்புடையவை : அடையாளச் சின்னம் மற்றும் வெறுமை, அறிவார்ந்த விளக்கம், சிக்கல்களை குறைந்த வழிகளில் அணுகுதல என்பனவற்றை விட நேரிடையான மற்றும் திடமான வழிகளில் கற்றல்.

5. சமூகப்பண்பாடு : குடும்ப அடிப்படையைச் சிறிதளவே புரிந்து கொள்ளும் குடும்பங்களிலிருந்து வருவது. போதுமான அளவில்லாத பற்றுதல் குறைந்த ஒழுக்கப்பண்பு, தடுத்து நிறுத்தக்கூடிய வெளிப்பாடுகளின் தேவையற்ற மாதிரிகள் ஆரம்ப ஆண்டுகளில் பொருந்தாத குண இயல்புகளைக் கொண்டிருத்தல்.

பிற்கால குற்றம் மற்றும் தவறுகளை வெளிப்படுத்தல் குழந்தைப் பருவ முன்னறிவிப்புகள்.
ஒரு குறிப்பிட்ட நபர் எதிர்காலத்தில் வரம்பு மீறிய செயல்களைச் செய்வாரா? என்று முன்னறிவிப்பு செய்வதில் உளவியலாரும் மனநோய் பற்றிய பிரிவினரும் பின்னடைவு பெற்றுள்ளனர். ஆனால் ஒருவர் எதிர்காலத்தில் குற்றம் செய்வார் என்பது பற்றி கூடுதலான அல்லது குறைவான வாய்ப்புகள் பற்றிய காரணிகளை ஆய்வு செய்ய முயற்சி செய்கின்றனர். சில தனிநபர்களைப் பொறுத்தவரை அத்தகைய முன்னறிவிப்புகள் அனுமானிக்கக் கூடியவையாகின்றன. ஒரு நபருக்குப் பல நிலைகள் உண்டு. ஆனால் எதிர்காலத்தில் குற்றங்கள் புரியும் அபாயம் அதிகம் உள்ளது.

பிளவூட்டக் கூடிய வகுப்பறை நடவடிக்கை, துன்புறுத்தல்கள், பொய் பேசுதல், அவமரியாதையாக நடத்தல் போன்ற குழந்தைப்பருவ நடததைச் சிக்கல்கள் மூலம் பிற்காலத்து தவறுகள் மற்றும் குற்ற நடத்தைகள் ஆகியன வலிமையாக முன்னறிவிப்பு செய்யப்படுகி;ன்றன. இதன்படி குழந்தையாக இருக்கும் போது அதிகமான பிரச்சனைக்குக் காரணமானவர் பின்னர் வாலிபப்பருவம் மற்றும் வயதான நிலையில் அதிக பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். குழந்தைகள் கவனிப்பில் பெற்றோர் அக்கறை குறைவான தன்மை, பேற்றோர்களால் தீங்கிழைக்கப்பட்ட மந்த புத்தி. கல்வித் தகுதி கொண்ட பிள்ளைகள் மற்றும் பெற்றோரிடமிருநது பிரிந்து வாழும் பிள்ளைகள் போன்றவையும் அவற்றுள் அடங்கும். (பாரக் ஓபாமா இதற்கு விதிவிலக்கு)

குலூவாக்ஸ் சார்ந்தோர் மூன்று முன்னறிவிப்பு படிகளை உருவாக்கியவர். ஒன்று சமூகப் பின்னணி சார்ந்தது மற்றொன்று ரோர்ஸ்காக் சோதனை மூலம் தீர்மானிக்கப்பட்ட குணப்பண்புகள் மற்றும் மனநோய் பிரிவினரின் நேர்முகப் பேட்டி மூலம் தீர்மானிக்கப்பட்ட ஆளுமைப் பண்புகள் சார்ந்தது. நம்பத்தகுந்த குழந்தைப்பருவ சுட்டிக்காட்டல்கள் மூலம் எதிர்காலக் குற்றங்களைக் கணிப்பது பற்றி ஆர்வம் உளவியலாளரிடையே இன்று தோன்றியுள்ளது.

தொகுப்புரை
குறிப்பிட்ட சில ஆளுமைக் குணவியல்புகளை அல்லது குறைந்த அறிவாற்றலை உடையவர்கள் குற்றங்கள் அல்லது தவறுகளைச் செய்வர் என்ற விரிவான எண்ணம் உள்ளது. இக்கூற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் காலம் பற்றிய ஆய்வு திட்டவட்டமான முடிவுகளை எட்டப் போதுமானதாக இல்லை. எனவே குற்றம் பற்றி பொதுவாக விளக்கக்கூடிய வகையில் ஆளுமைப் பண்பு அல்லது அறிவாற்றல் எந்த அளவுக்குச் செயல்படுகின்றதென்பது தெளிவாக்கப்படவில்லை உளவியல் பண்புகளை விட மக்களின் சூழ்நிலைகளை ஆய்ந்தறிய முற்படும்போது குற்றவாளிகளின் அல்லது தவறு செய்வோரின் நடத்தைகளை பற்றி எண்ணுவது பயனுள்ளதாக இருக்கும்.

REFRENCE

Criminological Theories  Forth Edition  Rawt Puplic New Delhi

Chokalingam K.Criminology In Tamil Parvathi Publications

General Principal Of Criminal Liability In Srilanka G.L Peris

உளவியல் Dr Kajavinthan

– S.Ithayatheepan,
Dip In Counseling, NISD, Kilinochchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *