முரண்பாடான மனவெழுச்சி நிறைந்த குமரப்பருவம்

– யுவராஜ் – Working paper – 25

மற்றைய உயிரினங்கள் போன்றே உயிரும் உடலும் பெற்று வளர்ச்சியடைந்து கொண்டிருப்பவன் மனிதன. மனித வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிப் பருவங்களாக வகுத்துள்ளனர் உளவியலாளர்கள். இவை முறையே:

1. குழந்தைப் பருவம் (பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை)
2. முன் பிள்ளைப் பருவம் (3 – 6 வயது வரை)
3. பிள்ளைப்பருவம் (6 – 8 வயது வரை)
4. பால் முதிர் பருவம் (8 – 12 வயது வரை)
5. குமரப்பருவம் (12 – 18 வயது வரை)

குமரப்பருவம்:
இப்பருவத்தின் இறுதியில் ஒருவருடைய உடல் – உளத் திறன்களில் முழுச்சக்தி பெறுகின்றார். இப்பருவச் சமூகத்தர்க்கமானது ஒருபால் குழு, பிறர்பால் குழுவை விரும்பும் தன்மை, இவ்வயதில் ஏற்படும் பிரச்சினை தன்னைப்பற்றிய நிலையான கருத்து (Identity) அல்லது தன்நிலை பற்றித் தெளிவற்ற, முழப்பமான கருத்தைக் கொண்டிருத்தல். இதனாலேதான் நிலையற்ற மனவெழுச்சியுடைய முரண்பாடான காலம் என்பர் உளவியலாளர். இப்பருவத்தினர் தம் ஆளுமையை வெளிப்படுத்துவது நண்பர்களை உலகமாய் நினைப்பது, எதையும் தாமே தனித்துச் செய்யவும் விரும்பும் பருவம் (20-30). குமரப்பருவத்தினர் தம் தனித்தன்மையை அடைய ப் போராடுவர். இதனால் பெற்றோருடன் முரண்படுவர். பணியவும் மறுப்பர். முரட்டுத்தன்மையாக இருப்பர்.

பக்குவநிலைப் பருவம் (Maturity) (20-30 வயது வரை)
இப்பருவத்தில் ஒருவன் தன் வாழ்வில் முழு முன்னேற்றமடைகின்றான். இப்பருவத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்படல், அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல் போன்ற சிக்கல்களை எதிர்நோக்குவர். இப்பருவத்தில் சமூகத் தொடர்புகளை வலுவுறச்செய்ய வேண்டும். காரணம்: இப்பருவத்தின் பின் இவர்களது வலுவும் திறனும் வலுவிழக்கும். நவீன மருத்துவ வசதிகளால் இப்பருவம் 70 வயது வரை நீடிக்கலாம்.

தளர்வுப் பருவம்
இதன்பின் கிழப்பருவம் (Old Age) இது 70 வயதிருருந்து இறுதிவரை மனித வளர்ச்சியில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் சிறிய மாற்றத்தைப் பெறுகின்றான். இதற்கமையவே பல்வேறு ஆளுமைப் பண்புகளை வளர்பருவத்தினர் பெறுகின்றனர். தன்னம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், பொறுப்புணர்ச்சி போன்ற பண்புகள் குழந்தைகளிடம் ஆரம்பத்தில் ஏற்படா. அப்பண்புகளைப் பெற்றோரே அதற்கான வாய்ப்புக்களை அளித்துக் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படிப் பழக்கப்படாதோர் பொறுப்பற்ற செல்லப் பிள்ளையாகவே பெற்றோருக்கு மாறுவர். குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல், அவர்களது திறன்களை வெளிப்படுத்தல் என்பன கல்விச் செயல்முறையின் நோக்கங்களாகும்.

வளர்ச்சியென்பது மரபுநிலைச் சூழ்நிலை என்பன இணைந்து செயற்படுவதன் விளைவாகும். மனித வளர்ச்சியில் எடுக்கப்பட்டுள்ளது. பரம்பரைக் கூறுகள் பெரும்பாலும் உடற்கூறு வயது (Actual Age), பயிற்சி (Training), நாளமில் சுரப்பிகளின் பங்கு, இது செயற்பாட்டு நிலைக்கு உதவுவதுடன் அகச்சுரப்பிகளான பீனல் (pineal gland), பிட்ரியூட்டரி (Pituitary), தைரொயிட் (Thyroid), பராதைரொயிட் (Parathyroid), அட்றினல்ஸ் (Adrenals), ஓவறி (Ovaries), ரெஸ்ரிஸ் (Testes), பங்கிரியஸ் (Pancreas), என்பவற்றின் அகப்புறச் சுரப்புக்களைத் தூண்டுகிறது.இவை உடல்-உள வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதுடன் கவர்ச்சி, மொழித்திறன், சமூகப்பண்புகள் என்பவற்றின் அபிவிருத்தியில் சூழலே முக்கிய பங்காற்றுகின்றது. உயர் பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சொற் களஞ்சியத் தொகை, பயன்படுத்தும் வாக்கியங்களின் நீளம், கேட்கும் கேள்வி என்பனவற்றில் மற்றைய குழந்தைகளைவிட சிறப்புடையவராவதற்கு சூழ்நிலையே காரணமாகும். அறிவு வளர்ச்சிப்புலன், காட்சித்திறன், நினைவாற்றல், கற்பனை, மொழித்திறன், பொதுமைக் கருத்துக்கள் உருவாக்கும் திறன், ஆய்வுத்திறன். பொருளறிவு என்பன அடங்கும்.

சிக்கல்கள் பல நிறைந்த குமரப்பருவம் (Adolescence)
இப்பருவம் குழந்தை நிலையிலிருந்து ஒருவர் முழு முதிர்ச்சி நிலைக்கு மாறும் பருவமாகும். Adolescent  என்ற ஆங்கிலப்பதத்தின் பொருள் வளருதல் என்பதாகும். இதன் முக்கிய தன்மை ‘துரித மாற்றமாகும்’ என்பதாகும். இப்பருவம் பிள்ளைப்பருவத்தின் பின்வரும் 12-18-20 வயதிற்கு இடைப்பட்ட காலமாகும். இப்பருவம் முழு முதிர்ச்சியடையும் பருவமாகும். இப்பருவத்தில் ஒவ்வொருவரும் பால் முதிர்ச்சியடைகின்றனர். இப்பருவத்தினர் பிள்ளைப்பருவத்தினரின் சில பண்புகளையும், முதிர் பருவத்தினரின் சில பண்புகளையும் கொண்டிருப்பர். இப்பருவத்தினர் தனக்கென தனியான அடையாளத்தைக் கொண்டிருப்பர். இப்பருவத்தினர் தமது எதிர்காலம் பற்றிச்சிந்தித்து முடிவெடுப்பர். உயர்நிலைக்கல்லூரியில் கல்வி கற்கும் பருவத்தினர் குமரப்பருவத்தினரே. 11, 12 வயதுடைய உடல் – உள வளர்ச்சிப் பெறாதவர்கள் தம் இறுதிக்கட்டத்தை அடையும் காலமே குமரப்பருவமாகும். பூப்புத் தொடங்கி பெற்றோராகும் தகுதி பெறும் காலமே குமரப்பருவமாகும். இப்பருவ வளர்ச்சியானது தட்ப வெப்பநிலை, மரபுநிலை உட்கொள்ளும் உணவுநிலை போன்றவற்றால் பிள்ளைகள் மிக விரைவாகப் பூப்படைகின்றனர். உளவயலாளர் ஸ்டான்விகால் என்பவர் குமரப்பருவத்தைச் ‘சிக்கலான அமைதியற்ற பருவம்’ என்கிறார். மற்ற பருவங்களைவிடக் குமரப்பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தனிப்பட்டவையாகும. இப்பருவப் பிரச்சினைகளைக் கையாளச் சரியான வழி நடத்தல்களும், அறிவுரைகளும் பிள்ளைகளுக்கு மிகமிக அவசியம். இதில் பெண் பிள்ளைகளுக்குத் தாயும் ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையும் பரிவுடன் வழிகாட்டியாக விளங்குவதுடன் ஆசிரியர்களின் பங்களிப்பும், அவதானிப்பும் மிகமிக அவசியமானது. இப்படியான வழிநடத்தல் இல்லாத பிள்ளைகளே சமூகத்தில் பொருத்தப்பாடில்லாதவர்களாக சகல தீயப் பழக்கங்களின் உறைவிடமாக சிறைகளை நிரப்புகின்றனர்.

இப்பருவம் பல பொது இலட்சியங்கள் நிறைந்ததாகக் காணப்படினும் அவை உண்மை நிலையுடன் பொருந்தாதவையாகக் காணப்படும். இவர்களிடம் மற்றைய பருவத்தினரிடம் காணப்படாத சில தனிப்பட்ட உடல், உள மனவெழுச்சிகள், சமூக அறப்பண்புகள் போன்றன அவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. அவர் பண்புகளிற் குறிப்பானவை:

 • வழமைக்கு மாறாக முரண்பாடுடையவர்களாக இருப்பர்.
 • சில பொழுது குழந்தைகள் போன்றும், சில பொழுது வளர்ந்தோர் போன்றும் செயற்படுவர்.
 • அவர்கள் மனவெழுச்சிகளிலும் முரண்பாட்டை உறுதிப்படுத்த முடியும்.
 • இவர்கள் சில பொழுது சுயநலம் மிக்கவராகவும், சில பொழுது இலட்சிய வேட்கையுடையவராகவும் காணப்படுவர்.

ஒரு பொழுது தளர்ந்தோருடனும் (Pessimism), உடனடியாகவே தளராதோராகவும் (Optimism) செயற்படுவர். ஓவ்வொரு வளர்ச்சி நிலையிலும் புதியவற்றைக் கற்பதே வளர்ச்சியடைவதன் அடையாளம். எனவே இப்பருவத்தில் ஆசிரியர் பிள்ளையின்

 • உடல் முதிர்ச்சி
 • பண்பாட்டின் செல்வாக்கு
 • தனிக் குழந்தையின் தனிப்பட்ட குணம் என்பன பற்றி ஆசிரியர் அறிந்து அறிவூட்ட வேண்டும். மாணவர்களுக்கு புதிய தீமைகளைக் கற்றுக்கொடுக்கும்பொருத்தமான பருவமிது.

இப்பருவத்தினருக்குப் பின்வரும் ஆளுமைத் தேவை அவசியம்.
1. சுயம்
2. தீர்ப்பு
3. சாதனை
4. மன நிறைவைத்தரும் வாழ்க்கைத் தத்துவம் இவற்றைப் பாடசாலைக் கல்வி உரியமுறையில் நிறைவு செய்ய வேண்டும்.

குமரப்பருவ மாறுதல்கள்:

 • வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றது.
 • குழப்பமான மன நிறை நிலையுடனிருப்பர். எதையும் தனித்து செய்ய விரும்புவர்.
 • உடலில் நாளுக்கு நாள் மாற்றம் தோன்றுகிறது.

உடலில் எல்லாப் பகுதிகளுமே ஒரே நேரத்தில் வளர்ச்சியடைகின்றது. எலும்புக்கூடு வளர்வதால் உயரம், எடை அதிகரிக்கின்றது. உடலின் உள்ளுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றது. மூளை வளர்ச்சியடைந்து சிக்கலடைகின்றது. உடலின் என்டோகிறேன் (நாளமில் சுரப்பி) சுரப்பதால் மற்றைய சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. பாலுட் சுரப்புக்களான ஈஸ்ரொஐpன் (பெண்களில்), ரெஸ்ரிஸ்ரறேன் ஆண்களில் சுரப்பதால் உடலில் பல மாற்றமும் பொலிவும் ஏற்படுகின்றது. பெண்கள் இனிய குரலையும், ஆண்கள் தடித்த குரலையும் பெறுகின்றனர். பெண்களில் உடலும் பாலுறுப்புக்களும் பன்முனை வளர்ச்சிப் பெறுவதால் உடல் வளர்ச்சி வேகம் ஒரே சீரில்லாததால் குமரப்பருவத்தினர் நடக்கும் போதும், வேறு ஏதாவது செய்யும் போதும் உடலும் அதன் பகுதிகளும் சமநிலையிழந்து இயங்கும் பெண்பிள்ளைகள் சமச்சீரற்றே நடக்கின்றனர். இதனால் இப்பருவத்தினர் பிறர் தம்மைப் பார்த்து ஏதாவது நினைப்பர் என நினைத்து வெட்கம், கூச்சமடைகின்றனர். கவனமின்மையும் பதட்ட நிலையும் இதனாலேயே அவர்களுக்குத் தோன்றுகிறது. இந்நிலையில் பெற்றோரும், ஆசிரியரும் நிலையறிந்து அவர்கள் மீது தண்டனை அளிக்காது பரிவுகாட்டி கற்பிக்க வேண்டும். கவர்ச்சி வழிகளிற் கற்பிப்பது நல்லது.

 • உடல் வளர்ச்சி திடீரென அதிகரிப்பதால் இப்பருவத்தினர் நிறையச் சாப்பிடுவர். அளவு மீறிச் சாப்பிட்டால் உடல் பருமனடைந்து அதுவும் பிரச்சினையாகலாம்.
 • பாலுட் சுரப்பிகளினால் உடலில் தோன்றும் மாற்றங்களே இப்பருவத்தினருக்கு மிகுந்த அச்சத்தினையும், கவலையையும் அளிக்கும்.
 • இச்சுரப்புத் தொழிற்பாடு ஆண்களைவிடப் பெண்களுக்கு 2 வருடங்கள் முன்பே நடக்கிறது. இம் மாற்றங்கள் பற்றிப் போதிய அறிவூட்டப்படாவிட்டால் அவர்கள் ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கும்.
 • பெற்றோர் நல்ல உணவு, அமைதியான தூக்கம், நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க கொடுக்க வேண்டும்.

இப்பருவம் தொடங்குமுன்பே இம் மாற்றம் பற்றிப் பாடசாலையில் கற்பிக்க வேண்டுவதுடன், பாலியல் பற்றிய சோதனை இப்பருவத்தினருக்கு அவசியம். இதைப் பெறத் தவறும் சிறுமியரே பாலியற் துஸ்பிரயோகங்களிற் சிக்கியும்,கருக்கலைப்பிற் சிக்கியும் சீரழிவதுடன், கொலை, தற்கொலை,கருவழிப்பு என்ற வேண்டாத சிக்கல்களுக்கு உட்பட்டு உயிரையும், மானத்தையம் இழக்கின்றனர். மேலைநாடுகளிற் பதும வயதுடையவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் படி கூறப்பட்டுள்ளது. விளம்பரப்பலகையூடாக பாலியற் கல்வி நடைமுறைப்படுத்தப்படாத எமது இச்சிறிய இலங்கைத் தீவில் தினமும் ஆயிரம் சிறுமியரும், பெண்களும் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.

குமரப்பருவ மனவெழுச்சிப் பிரச்சினைகள்
இது ஓர் அமைதியற்ற பருவமாகும். கோபம், பயம், மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகள் ஒருவரின் உடல்-உள்ளம் எல்லாவற்றையுமே கலக்கும் சக்தியுடையவை. குமரப்பருவத்தினரை இம்மனவெழுச்சியானது மிகவும் பாதிக்கின்றது. மனவெழுச்சியைத் தூண்டும் நிலை இப்பருவத்தினரிடம் அதிகம் ஏற்படுகின்றது. உடலில் ஏற்படும் மாறுதலால் கூச்சம், கவலை போன்றன பிள்ளைகளை உலுப்புகின்றது. தம் தோற்றம், உடல் நலம், தம்மைப் பற்றிப் பெற்றோரின் மனப்போக்கு பாடசாலையிலும் சமூகத்திலும் வெற்றிபெற வேண்டும் என்னம் அவா போன்ற கவலை இப்பருவத்தினரிடமிருக்கும். இது துல்லியமான பருவமாகையால் சமூகத்தில் அவர்கள் அந்தஸ்து என்ன என்பதில் கவலைக் கொண்டிருப்பர். தம்மை ஒத்தவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதில் அக்கறை செலுத்துவர். இப்பருவம் தன்மான உணர்வு மிக்க பருவம் என்பதாலேயே சிறு விடயங்களக்காகவே தற்கொலைப் புரிகின்றனர். இப்பருவத்தினரை அளவுக்கு மீறிப் பெற்றோரோ, ஆசிரியரோ கட்டுப்படுத்துவது ஆபத்தானது.

குமரப்பருவப் பிரச்சினைகள்
எதிர்பாலாருடன் உறவைப் பேண விருப்பப்படுவர். புhலுணர்வு கொண்ட மனவெழுச்சிகளால் பெற்றோர்கள், பெரியோர்களது கட்டுப்பாட்டை விரும்பமாட்டார்கள். (ஆனால் கட்டுப்பாடுகள வீட்டிலும், பாடசாலையிலும், சமூகத்திலும் இருந்தே தீர்க்கின்றன) பாரபட்சமாகத் தங்களை அவமதிப்பதாக பெற்றோரும், ஆசிரியரும் நடத்துவதை எதிர்க்கின்றனர். சில சமயம் பாடசாலை இடைவிலகலும் பாடசாலைக் கற்றலுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கின்றனர். இதனால் காரண காரியத் தொடர்பகளின்றி மனவெழுச்சியேற்படுகின்றது.

 • சமூக நிலமைகளுடன் பொருளாதார சிக்கல் ஏற்படும்.
 • முதியோர், அதிகாரத்தில் இருப்போர் என்போருடன் சிக்கல்கள் எற்படும்
 • பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயற்சிப்பர்.
 • தன் உண்மை நிலையை, சுய கருத்தினை உருவாக்குவதுடன் தன் எதிர்காலம், தன்னம்பிக்கைப் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதால் பிரச்சினைகள் எழும். கல்வி , பொருளாதாரம், சமூக அந்தஸ்து பற்றிய விடயங்களிலும் இவர்கனுக்குப் பிரச்சினை எற்படும்.
 • இவர்களிடம் பின்வரும் விடயங்களிற் பொருத்தப்பாடின்மை காணப்படும்.

உதாரணம்:
1. புறத்தேற்றல்
2. ஈடுசெய்தல்
3. புகற்கனா காணல்
4. காரணம் கற்பித்தல். இப்பொருத்தப்பாடின்மை தீவிரமானால் அவர்களது நடத்தை பாதிப்படைகின்றது. இதனால் அவர்கள் நெறிபிறழ்வ நிலையடைவர்.

இவ்வயதினருக்கு மனவெழுச்சியை எப்படி கட்டுப்படுத்தி வழிப்படுத்த வேண்டும் என்பது பற்றிய கல்வி புகட்டல் ஆசிரியரின் கடமைகளில் ஒன்று. அவர்களை மடை மாற்றம் செய்ய வேண்டும்.

இவர்களில் உடல் வளர்ச்சி போன்றே அறிவு வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இப்பருவத்தினரின் கவர்ச்சிகள் பெருகி விரிவடையும். தமது எதிர்காலத் தொழில் பற்றிய தீர்மானத்தையும் இப்பருவத்திலேயே தீர்மானிக்கின்றனர். பயனற்ற விடயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

இப்பருவத்திலேதான் நுண்ணறிவும் ஆய்வுத்திறனும் அதிகரிக்கின்றது.

இப்பருவத்தினர் சமூகவியல், குடியியல், அரசறிவியல் சார்ந்த பிறர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல், பிறருடன் ஒத்துழைத்தல், தம் செயல் விளைவுகளைத்தாமே பொறுப்பேற்றல், பிற நண்பர் குழாம்களைக் கொண்டிருத்தல், சுயமதிப்பீட்டை அடைதல், சவால்களைச் சமாளித்து அவற்றுடன் பொருந்திச் செயற்படல், சமூக நலனிற் பங்காளியாதல் போன்ற சமூகமயமாதற் சிந்தனைகளில் நிறைவு பெற்றபோதும் பொறுப்புக்களைத் தனிமையாக நிறைவேற்றும் திறன் இல்லாதிருப்பர்.

இவர்களுக்க நண்பர் குழுக்கள் ஏற்பட்டு அக் குழுவினரின் நடை உடை பாவனையைப் பின்பற்றுவதுடன் அந்தக்குழு ஒரு சக்திமிக்கது என நினைத்துச் செயற்படப்பார்ப்பர். இக்குழு வாழ்க்கைகூட்டு வாழ்க்கைக்கு உதவும். நல்ல தொடர்பான பெற்றோர் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடாது. நண்பர்கள் பற்றிப் பிறர் கருத்துக்கூறுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பிழiயான நண்பர்கள் தொடர்பானால் பிள்ளைக்க மனச்சஞ்சலம் அற்ற நிதான அறிவை ஏற்படுத்திப் பக்குவமாய் நல்ல நண்பர்கள் தொடர்பை ஏற்படுத்தத் தூண்ட வேண்டும். முதியவர் ஸ்தானத்தைத் தாமும் பெற முயற்சிப்பர். இப்படியான முதன்மை ஊக்கம் அவனிடம் சில சிக்கல்களைத் தோற்றிவிக்கும். இதனால் பெற்றோர். பெரியோர் சிலவேளை எதிர்க்கவும் தலைப்படுவர். எனவே இப்படியானவர்களைச் சற்றுச் சுயேற்சையாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

இப்பருவத்திற் பயனுள்ள மனப்பான்மையைப் பிள்ளையிடம் உருவாக்க வேண்டும். தவறின் இவர்களது மனப்பான்மைகள் எதிர்மறையானதாகவும், மரபு மீறல் தன்மை உடையனவாகவும் இருக்கும்.

குமரப்பருவத்தினரது கல்வி சார்ந்த மனப்பான்மை, பேச்சுப்பழக்கம், வலுவந்த நடத்தைகள் பற்றிய மனப்பான்மை, பால் தொடர்பகள் பற்றிய மனப்பான்மை என்பன இப்பருவத்தினரின் சமூக, பொருளாதார நிலையைப் பொறுத்தே எழுகின்றது.

அற நடத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்பருவத்தை ஒத்த குழுவினரின் சிந்தனைகளுடன் இணைந்திருக்கும். விஞ்ஞான முன்னேற்றம் சமய சிந்தனைகளை உடைத்தெறிகின்றன.

இவர்கள் நிலையான கவர்ச்சிகளைப் பெறுவது அவசியம்

1. தனிப்பட்ட கவர்ச்சிகள்
2. விளையாட்டுப் பொழுதுபோக்குக் கவர்ச்சிகள்
3. சமூகக் கவர்ச்சிகள்
4. கல்விசார் கவர்ச்சிகள்
5. தொழில்சார் கவர்ச்சிகள் போன்றவற்றில் ஊக்கப்படுத்த வேண்டும். இத் துறைகளில் தவறான கவர்ச்சிகள் அதாவது தீய நண்பர்கள், திரைப்படங்கள், இணையத்தளங்கள், கைப்பேசிகள், போதைப்பொருட் பாவனை போன்ற தீய வழியில் நடாத்தி அவர்கள் வாழ்வைச் சீரழித்தவிடும்.

இப்பருவத்தினர் வழிகாட்டலின் முழு வெற்றிபெற வேண்டுமெனின் பிள்ளைகளை இவ்வலகிற்கு அறிமுகம் செய்த பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் சகல நடவடிக்கைகளையும் கண்ணும் கருத்துமாக அவதானித்து அவர்கள் தேவைகளை உரியபடி நிறைவு செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்படும் சகல துஸ்பிரயோகங்களுக்கும் பெற்றோரின் அறியாமையும், அக்கறையின்மையுமே முழுமையான காரணமாகும். அத்தடன் இப்பருவம் பாடசாலைப் பருவம் என்பதால் ஆசிரியர்கள் மாணவரது ஒழுக்கம், அறிவு, அறப்பண்புகளை வளர்ப்பதில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.

குமரப்பருவத்தினரிடம் குறுக்கிடும் சில சிக்கல்கள்
1. வயதிற்கு அதிகமான அல்லது குறைந்க வளர்ச்சி
2. முதிர்வடைந்தோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் இப்பருவத்தினரிடம் காணப்படம் தவறான கருத்துக்கள்
3. பயனுள்ள தொழில்களைக் கற்றுக்கொள்ளாமை
4. பெற்றோர் கட்டுப்பாடு பற்றித் தப்பெண்ணம் கொள்ளுதல். அதாவது அளவுக்கு மீறிய பாதுகாப்பு அல்லது வெறுத்து ஒதுக்குதல்.
5. குடும்பத்தின் உட்பூசல்கள்
6. பிள்ளைகளின் திறன்களைப் பற்றிப் பெற்றோர் அளவுக்கதிகமான மதிப்பீட்டைக் கணித்துக்கொள்ளுதல்.
7. தம்மால் முடியாததை இப்பருவத்தினர் மூலம் நிறைவுசெய்ய முற்படல்.

பெற்றோரும் ஆசிரியரும் அவர்களின் செயல்களிற் குறுக்கிடாது அவர்களிடம் பொருத்தமான பொறப்புக்களைக் கையளிக்கவேண்டும். அன்பும் பரிவும் கொண்ட பெற்றோராலும், ஆசிரியர்களாலுமே ஒவ்வொரு பிள்ளையினதும் குமரப்பருவம் சரியான இலக்கினை அடைய முடியும். அதனை அவர்கள் கடந்து செல்லவும் முடியும். பேற்றோர்கள் வீட்டில் இவர்களுக்கெனத் தனியறையை ஒதுக்கல், அதில் அனுமதிபெற்றே பிரவேசிக்க வேண்டும். அவர்களின் பொருட்களைச் சோதிக்கக்கூடாது. குடும்பப் பெரியவர்களை நடத்துவது போன்றே அவர்களையும் நடத்த வேண்டும். அவர்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. காலந்தவறிவரும் பெண்குழந்தையிடம் பாதுகாப்புக்குறித்து விசாரியுங்கள். அவர்கள் திறமைகளைப் பாராட்டுங்கள், இரசியுங்கள். அவர்கள் ஆர்வத்தை முளையில் கிள்ளாதீர்கள். இப்பருவத்தினருடன் அன்புடனும் பரிவுடனும் நடந்துகொள்ளுங்கள. வன்முறைகளைப் பயன்படுத்தாது உங்கள் விருப்பங்களைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறுங்கள்.

துணைநின்றவை
‘சிறுவர் துஸ்பிரயோகம்’ (2013), டாக்டர். ஆ. பேரின்பநாதன். கரிகணன் பிறிண்டேர்ஸ், 681 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

‘பாதுகாப்பான சிறுவர் உலகம்'(2013), சட்டத்தரணி நிருஸியா சாத்விகன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

– யுவராஜ்,
NISD, உளவளத்துணை கற்கை நெறி,
கிளிநொச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *